முகப்புகோலிவுட்

'விழுந்து எழுவது வீரனின் குணம்' - பிரேம்ஜி வெளியிட்ட தோனியின் பிறந்தநாள் Mashup video..!!

  | July 04, 2020 11:07 IST
Happy Birthday Captain Cool

துனுக்குகள்

 • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய
 • இந்நிலையில் வரும் ஜூலை 7ம் தேதி தனது 39வது அகவையில் அடியெடுத்து
 • தற்போது பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் அவர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகிய தோனி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின்னர் இதுவரை வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தோனியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்பட்டு அப்படம் மாபெறும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் ஜூலை 7ம் தேதி தனது 39வது அகவையில் அடியெடுத்து வைக்க இருக்கு தோனிக்கு இப்போதே வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு பல தரமான காணொளிகளும் உருவாகி வருகின்றது. 

தற்போது பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறித்தனமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். WC ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த காணொளி தோனியின் பெருமையை கூறும் வண்ணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com