முகப்புகோலிவுட்

'மகிழ்ச்சியில் ரசிகர்கள்' - வெளியானது 'மாஃபியா'-வின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்..!!

  | July 18, 2020 07:43 IST
Ost

துனுக்குகள்

 • துருவங்கள் பதினாறு திரைப்படத்தையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில்
 • ‘என்னை அறிந்தால்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த அருண் விஜய்க்கு
 • மாஃபியா திரைப்படத்தின் OST எனப்படும் Original Sound Track தற்போது
துருவங்கள் பதினாறு திரைப்படத்தையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அண்மையில்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் தான் ‘மாஃபியா : Chapter -1'. இப்படத்தில் முன்னணி கதாப்பத்திரங்களில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிக்க கதையின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து அசத்தி இருந்தார். இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, கோகுல் பினாய் இப்படத்திற்கான கேமரா வேலைகளைக் கையாள, ஸ்ரீஜித் சாரங் ப்டத்தொகுப்பு செய்திருந்தார். 

இப்படத்தின் ரிலீசுக்கு முன்பே இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் ‘வேடன் வந்தாச்சோ' வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி உலகெங்கும் வெளியான நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது. 

‘என்னை அறிந்தால்' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த அருண் விஜய்க்கு ‘குற்றம் 23', ‘செக்கச் சிவந்த வானம்', ‘தடம்' தற்போது மாஃபியா என்று தொடர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் பலரும் மிகவும் ஆவலுடன் எதிர்பாத்திருந்த மாஃபியா திரைப்படத்தின் OST எனப்படும் Original Sound Track தற்போது வெளியாகியுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com