முகப்புகோலிவுட்

'இன்னும் 30 நாள் இருக்கு' - இயக்குநர் தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட போஸ்டர்..!!

  | June 28, 2020 07:28 IST
Desingh Periyasam

துனுக்குகள்

  • துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த
  • இப்படம் திரையரங்குகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தபோதும், கொரோனா வைரஸ்
  • அதற்காக ஒரு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் KKK படத்தின்
துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது. இப்படம் விமர்சகர்களிடமிருந்தும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் ஈட்டிவந்தது. துலகர் சல்மான் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேரடி தமிழ் படமாக இப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் திரையரங்குகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தபோதும், கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டது, மேலும் லாக் டவுன் விளைவாக நாடு முழுவதும் உள்ள அனைத்து சினிமா அரங்குகளும் மூடப்பட்டன. இந்நிலையில், சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், உலகின் பிற பகுதிகளில் தொற்றுநோயைப் பொறுத்தவரை விஷயங்கள் இயல்பாகி வருவதால், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பிரான்ஸ் நாட்டில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் வெளியிடப்படுகிறது.

இப்படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி, இந்த படத்தை மீண்டும் பிரான்சில் வெளியிடுவதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில் அடுத்த மாதம் 28ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடும் துல்கர் சல்மானிற்கு 30 நாட்களுக்கு முன்பாகவே அட்வான்ஸ் வாழ்த்துக்களை வெளியிட்டு அதற்காக ஒரு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் KKK படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com