முகப்புகோலிவுட்

"பிறந்தநாள் வாழ்த்துக்கள்" - Common Dp வெளியிட்டு மாளவிகாவை வாழ்த்திய லோகேஷ்..!

  | August 04, 2020 08:03 IST
Lokesh Kanagaraj

துனுக்குகள்

  • துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான 'பட்டம் போலே'
  • தற்போது, ரவி உத்யவர் இயக்கும் புதிய ஹிந்தி படத்தில் சித்தாந்த்
  • இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்காக ரசிகர்கள் commondp
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான 'பட்டம் போலே' என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்த நடிகை தான் மாளவிகா மோஹனன். மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த மாளவிகா ரஜினிகாந்தின் ‘பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தில் ‘தளபதி' விஜய்க்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுவருகிறார்.

தற்போது, ரவி உத்யவர் இயக்கும் புதிய ஹிந்தி படத்தில் சித்தாந்த் சதுர்வேதியுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தி நடிக்க, பெரும் ஊதிய தொகுப்புடன் கையெழுத்திட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் இந்த லாக் டவுன் காலத்தில் பல சிறப்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அசத்தி வருகின்றார். 

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்காக ரசிகர்கள் common dp ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த common dpயை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்டார். இதற்கு நன்றி தெரிவித்த மாளவிகா, இந்த நாளை சென்னையில் படக்குழுவினரோடு கொண்டாட ஆவலாக இருந்தேன் ஆனால் இந்த ஸ்டுப்பிட் கொரோனா... என்று குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com