முகப்புகோலிவுட்

'ஆர்யாவுக்கு கொடுக்கலயா..?' - மாங்காயில் கேக் செய்து அசத்தும் சாயிஷா

  | April 13, 2020 09:28 IST
Sayyeshaa

துனுக்குகள்

 • நடிப்பில் வெளியான Shivaay என்ற படத்தின் மூலம்
 • முதல் முறையாக ஜெயம் ரவி நடிப்பில் 2017ம் ஆண்டில்
 • தற்போது மீண்டும் தனது கணவருடன் டெடி என்ற படத்தில்
2015ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'அகிஹில்' என்ற படத்தின் மூலம் திரையுலகம் கண்டவர் தான் பிரபல நடிகையும், நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா. அதன் பிறகு பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான Shivaay என்ற படத்தின் மூலம் அவர் ஹிந்தியிலும் கால்பதித்தார். அதன் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் பிற மொழி படங்களில் நடிக்கவில்லை என்ற போதும் தமிழில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். 

முதல் முறையாக ஜெயம் ரவி நடிப்பில் 2017ம் ஆண்டில் வெளியான வனமகன் படத்தில் இவர் கதாநாயகியாக படு மாடர்ன் தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு தனது அடுத்த படமான கடைக்குட்டி சிங்கம் படத்தில் அப்படியே மாறுதலாக அழகிய கிராமத்து பெண்ணாக தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, கணவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் மற்றும் சூர்யாவுடன் காப்பான் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

தற்போது மீண்டும் தனது கணவருடன் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நிலவி வரும் ஊரடங்கால் வீட்டில் தனது நேரத்தை செலவிடும் சாயிஷா, சமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "எனக்கு மாங்கனிகள் மிகவும் பிடிக்கும், இதோ மாங்கனிகள் இங்கு சீஸ் கேக்களாக மாறியுள்ளது என்று கூறி" தனது சமையல் திறனை காட்டியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com