முகப்புகோலிவுட்

க்ரிஷ் குரலில் 'வெற்றி வேலா' - இசை ஆல்பத்தை வெளியிட்ட பிரபல நடிகர் சூர்யா..!

  | September 22, 2020 11:49 IST
Vetri Vela Album

துனுக்குகள்

 • ‘அழகிய அசுரா' என்ற படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்த க்ரிஷ்
 • கடைசியாக ‘முப்பரிமாணம்' திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் காணப்பட்ட
 • தற்போது பிரபல நடிகர் சூர்யா அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது
‘அழகிய அசுரா' என்ற படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்த க்ரிஷ், ‘வேட்டையாடு விளையாடு' படத்தில் ‘மஞ்சள் வெயில் மாலை இதே' பாடலை பாடி சிங்கராக மாறினார். இதனையடுத்து பல பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடி வருகிறார் க்ரிஷ். ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' எனும் படத்தில் ஹீரோவாக நடித்தார் ஆனால் அப்படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து சூர்யாவின் சிங்கம்-3 படத்தில் முக்கியகதாப்பாத்திரத்தில் நடித்தார்.

கடைசியாக ‘முப்பரிமாணம்' திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் காணப்பட்ட க்ரிஷ், ஓரிரு படங்களுக்கு இசையமைப்பளராக பணியாற்றிவருவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது, கிரிஷ் தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றி ஒரு இசை ஆல்பத்தை இயற்றியுள்ளார். ‘வெற்றி வேலா' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் ஜெயம் ரவி அவர்கள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆல்பத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் பிரபல இயக்குநரும், நடிகருமான திரு. வெங்கட் பிரபு அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது 10.45 மணிக்கு இந்த 'வெற்றி வேலா' ஆல்பம் தற்போது பிரபல நடிகர் சூர்யா அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com