முகப்புகோலிவுட்

தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை முடக்க நீதி மன்றம் அதிரடி முடிவு!

  | August 13, 2019 13:03 IST
Tamilrockers

துனுக்குகள்

 • தமிழ்ராக்கர்ஸை முடக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்
 • இது போன்ற இணையதளங்களால் தயாரிப்பாளர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்
 • பல்வேறு நடவடிக்கை எடுத்தும் இதுவரை படங்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் அனைத்து மொழி படங்களுக்கும் பெரும் சிக்கலாக இருந்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள். படம் வெளியான அன்றே சட்டவிரோதமாக படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதிக அளவில் முதலீடு செய்து படத்தை இயக்குபவர்கள், சிறிய அளிவில் திரைப்படங்களில் முதலீடு செய்கிறவர்கள் என அனைத்து தரப்பினரும் இது போன்ற இணையதளங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
 
இது தொடர்பாக பல்வேறு முறையில் நடவடிக்கை எடுத்தாலும் படங்கள் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியாவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தங்களது திரைப்படங்களை, தொலைக்காட்சி தொடர்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதால் பெரும் இழப்பு ஏற்படுவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட  இணையதள டொமைன்களை முடக்குவதற்கு மத்திய தொலைத் தொடர்பு துறை, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அத்தகைய இணையதளங்களை முடக்க முடியுமா என கேள்வி கேட்டு இணைய சேவை நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com