முகப்புகோலிவுட்

"இது போன்ற விசயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது" - மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரபல இயக்குநர்..!!

  | July 04, 2020 08:22 IST
Electricity Bill Hike

துனுக்குகள்

 • கொரோனா பரவல் காரமனாக பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபுறம் இருக்க, இந்த நோயின்
 • வேலையின்றி வீட்டிற்கு உணவிற்கு தேவையான பணம் சம்பாதிக்கவே
 • இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக
கொரோனா பரவல் காரமனாக பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபுறம் இருக்க, இந்த நோயின் தாக்கத்தால் பல தினக்கூலிகளின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. தினசரி வருமானத்திற்கே வலி தெரியாமல் நிற்பவர்கள் மத்தியில் பெரும் இடியாக வந்து இறங்கி உள்ளது மின்சார கட்டணம் என்று மக்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அண்மைக்காலமாக பல நடிகர் நடிகைகளும் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான சேரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "வேலையின்றி வீட்டிற்கு உணவிற்கு தேவையான பணம் சம்பாதிக்கவே கஷ்டப்படும் சூழலில் இது போன்ற விசயங்கள் ஏழைகளை மிரட்டுகிறது.. வீட்டுக்கு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்.. இதுபோன்ற நேரங்களில் தளர்வு அளிக்கவேண்டும் அரசு." எண்டு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் "  தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. ( கிராமங்களில் இருப்பவர்களுக்கும்)  அதற்கான காரணம் சொல்லப்படவில்லை." என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com