முகப்புகோலிவுட்

‘நான் ஒரு ஏலியன்’ புதிய ஆல்பம் பாடல்களுடன் வரும் ‘ஹிப்ஹாப் தமிழா’.!

  | August 05, 2020 11:04 IST
Naa Oru Alien

"வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்’ ஆல்பம் மூலமாக அவர் மீண்டும் களமிறங்குகிறார்”

ஒரு சுதந்திர இசைக்கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி, குறுகிய காலத்திற்குள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பாடகராகவும், இசையமைப்பாளராகவும் ஆனார். தற்போது ஒரு ஹீரோவாகவும் இயக்குநராகவும் கோலிவுட்டில் வலம் வருகிறார்.

சுந்தர் சி தயாரிப்பில் 'மீசைய முருக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக, இயக்குநராக அறுமுகமான அவர், அதையடுத்து ‘நட்பே துணை' மற்றும் ‘நான் சிரித்தால்' என இரண்டு படங்களில் நடித்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஆதி தற்போது கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில், சுதந்திர இசைக்கலைஞரான ஆதி வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ‘நான் ஒரு ஏலியன்' என்ற புதிய ஆல்பம் பாடல்களை வெளியிடவுள்ளார். 6 பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பத்தை ‘திங்க் மியூசிச்' வழ்ங்குகிறது.

இதில் ஒரு பாடலை First Single-ஆக நாளை வெளியிடப்படவுள்ளது. மேலும் இதற்கான அட்டகாசமான போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட Think Music, அதில் “2012-ல் வெளிவந்த ஹிப்ஹாப் தமிழாவின் ‘ஹிப்ஹாப் தமிழா' ஆல்பம் மூலம் தமிழ் உலகத்திற்கு ‘ஹிப்ஹாப்' எனும் புதிய வகை இசையை அறிமுகப்படுத்திய பெருமை Think Music-க்கு உண்டு. இந்தியாவின் முதல் தமிழ் ஹிப்ஹாப் ஆல்பம் அதுதான்.

திரையிசை கோலோச்சிய காலத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சுதந்திர இசை ஆல்பமான ‘ஹிப்ஹாப் தமிழன்' ஏற்படுத்திய அதிர்வுகள் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் ‘ஹிப்ஹாப்' எனும் சொல், இசையின் ஒரு வகையாகக் கொள்வதைவிட ஒரு கலைஞரை குறிக்கக் கூடியதாகவே மாறிவிட்டது. சமகாலத்தில் உலகின் மிகப்பெரும் தமிழ் ராப்பிசைக் கலைஞராக திகழ்வதற்கு மேலாக, வெற்றிகரமான நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியராகவும் ‘ஹிப்ஹாப் தமிழா' புகழ்பெற்றுள்ளார். வரும் சுதந்திர தினத்தன்று திரைப்படங்கள் சாராத சுதந்திர இசையுலகில் ‘நான் ஒரு ஏலியன்' (Naa oru Alien) ஆல்பம் மூலமாக அவர் மீண்டும் களமிறங்குகிறார்” என்று தெரிவித்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com