முகப்புகோலிவுட்

ஹிப் ஹாப் தமிழாவின் ‘நான் ஒரு ஏலியன்’ ஆல்பம் வெளியீட்டில் மாற்றம்!! டிராக் லிஸ்ட் இதோ.!

  | August 13, 2020 23:59 IST
Naa Oru Alien

ஒரு சுதந்திர இசைக்கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி, குறுகிய காலத்திற்குள் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் இயக்குநராகவும் வலம் வருகிறார்.

‘ஹிப் ஹாப் தமிழா' ஆதியின் ‘நான் ஒரு ஏலியன்' ஆல்பம் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

‘திங்க் மியூசிச்' வழங்கும் இந்த ஆல்பம் 6 பாடல்களைக் கொண்டுள்ளது. இந்த ஆல்பத்திலிருந்து ‘நெட்ட தொறந்தா' எனும் பாடலை First Single-ஆக கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் எதிர்மறைதன்மையை மையமாகக் கொண்டு, மார்ஸ் கிரகத்திலிருந்து வந்த ஒரு ஏலியன் பாடுவதைப் போன்ற இப்பாடல் இணையத்தில் செம வைரலானது. மேலும், இப்போது அந்த பாடல் 2 மில்லியன் பார்வைகளுக்கு மேலாக யூடியூப் தளத்தில் பார்க்கப்பட்டு தொடர்ந்து ஹிட்டாகிவருகிறது.

ஆல்பத்தின் மீதம் உள்ள 5 பாடல்கள் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது வெளியீட்டில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்த முழு ஆல்பமும் ஒரு நாள் முன்னதாகவே, சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதியே வெளியாகிறது. அதாவது நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மேலும், ‘நெட்ட தொரந்தா' பாடலைத் தவிர்த்து மீதமுள்ள 5 பாடல்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. அவை ‘டார்க் தாட்ஸ்', ‘எல்லாமே கொஞ்ச காலம்', ‘இணையம்', ‘போகட்டும் போகட்டும் போ' மற்றும் ‘யாருமே வேணாம்' ஆகும்.

ஒரு சுதந்திர இசைக்கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி, குறுகிய காலத்திற்குள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பாடகராகவும், இசையமைப்பாளராகவும் ஆனார். தற்போது ஒரு ஹீரோவாகவும் இயக்குநராகவும் கோலிவுட்டில் வலம் வருகிறார்.

சுந்தர் சி தயாரிப்பில் 'மீசைய முருக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக, இயக்குநராக அறுமுகமான அவர், அதையடுத்து ‘நட்பே துணை' மற்றும் ‘நான் சிரித்தால்' என இரண்டு படங்களில் நடித்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஆதி தற்போது கதாநாயகனாக நடிக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com