முகப்புகோலிவுட்

'நான் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளேன்' - இரங்கல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

  | March 28, 2020 09:35 IST
Sethuraman

துனுக்குகள்

 • அவரின் அகால மரணம் என்னைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
 • தற்போது உலகத்தில் நிலவி வரும் இந்த அசாதாரண நிலையில்
 • அவருடைய திடீர் மரணம் குறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்
2013 ஆம் ஆண்டு வெளியான காதல்-நகைச்சுவைப் படமான "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தில் /நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் சேதுராமன். பிரபல டெர்மடாலஜிஸ்ட் மருத்துவரான இவர் "கண்ண லட்டு தின்ன ஆசய்யா" படத்தின் வெற்றிக்குப் பிறகு, மேலும் மூன்று தமிழ் படங்களில் நடித்தார், "வாலிப ராஜா" (2016), "சக்கா போடு போடு ராஜா" (2017), மற்றும் "50/50" (2019). சிறந்த மருத்துவராக திகழ்ந்து வந்த இவர் துரதிருஷ்டவசமாக நேற்று மாலை இருதய கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

தற்போது உலகத்தில் நிலவி வரும் இந்த அசாதாரண நிலையில் இளம் வயதில் ஒரு பிரபல நடிகர் மரணித்திருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக நடிகர்கள் தெரிவித்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வந்த நிலையில் நடிகருக்கு திமுக இளைஞர் அணி தலைவருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவருடைய திடீர் மரணம் குறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் "சேதுராமன். நல்ல மனிதர், நல்ல நண்பர், சிறந்த மருத்துவர், திரைப்பட நடிகர். அவரின் அகால மரணம் என்னைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேதுவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று கூறினார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com