முகப்புகோலிவுட்

"பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம்..!!" - தமிழக அரசுக்கு பிரபல இயக்குநர் கடிதம்.

  | May 31, 2020 11:22 IST
Bharathiraja

துனுக்குகள்

 • இந்திய அளவிலும் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக
 • FEFSI மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பலரும் நன்றி தெரிவித்து
 • அதே போல வெள்ளித்திரை படப்பிடிப்புக்கும் சில தளர்வுகளை அறிவித்தால்
இந்திய அளவிலும் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பல தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. சின்னத்திரை படப்பிடிப்பு பணிகளிலும் 60 பேர் வரை பயன்படுத்தி வேலைகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அரசின் இந்த முடிவுக்கு FEFSI மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மூத்த இயக்குநர் பாரதி ராஜா தமிழக அரசுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "பல நல்ல நடவடிக்கைளை எடுத்து வரும் தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள், மேலும் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகளை 60 பேர் வரை கொண்டு நடத்த அனுமதி தந்தமைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அதே போல வெள்ளித்திரை படப்பிடிப்புக்கும் சில தளர்வுகளை அறிவித்தால் பலருக்கும் பெரிய அளவில் பயன் தரும் என்றும் அவர் தெரிவித்தார். வெள்ளித்திரை படப்பிடிப்பு தடையால் பலர் அன்றாட உணவிற்கே வழியின்றி தவித்து வருவதாக அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com