முகப்புகோலிவுட்

'படைகளை திரும்பப்பெற்ற சீனா' - பிரதமருக்கு வாழ்த்துச் சொன்ன நடிகை சாக்ஷி..!!

  | July 07, 2020 10:04 IST
Galwan

துனுக்குகள்

 • லடாக்கில் பதட்டமான கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா தனது படைகளை
 • அண்மைக்காலமாக சீனாவிற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்று
 • ட்விட்டர் பதிவில் இந்திய ராணுவத்திற்கும் பிரதமருக்கும் தனது வாழ்த்துக்களை
லடாக்கில் பதட்டமான கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா தனது படைகளை குறைந்தது ஒரு கி.மீ தூரத்திற்கு திரும்ப பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதியில்தான் கடந்த ஜூன் 15ம் தேதியன்று இந்திய - சீனா வீரர்களிடையே, ஏற்பட்ட பயங்கர மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, இந்திய வீரர்களும், படையை திரும்ப பெற்றதாகவும், இரு தரப்பு படையினருக்கும் இடையே மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன வீரர்கள் கால்வான் நதி வளைவில் இருந்து திரும்ப தொடங்கியுள்ளதாகவும், அப்பகுதியிலிருந்து கட்டமைப்புகளை அகற்றியுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில், கால்வான் பள்ளத்தாக்கில் இருந்து மட்டும் சீன படையினர் திரும்பி சென்றதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அண்மைக்காலமாக சீனாவிற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்று வாழ்த்து சொல்லிவரும் நடிகை சாக்ஷி இந்த நிகழ்விற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இந்திய ராணுவத்திற்கும் பிரதமருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com