முகப்புகோலிவுட்

ஒரே பாத்ரூமில் நடக்கும் திகில் கதை! புது முயற்சியில் ‘ரூம்’!

  | October 23, 2019 13:14 IST
Room

துனுக்குகள்

 • அம்முவாகிய நான்’, படத்தை இயக்கிய பத்மாமகன் இப்படத்தை இயக்குகிறார்
 • பெரும்பகுதியான காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழும் படம் இது
 • இப்படத்தை சுரேஷ் காமாட்சி, அஸ்வின் கே. தயாரிக்கின்றனர்
 தமிழ் சினிமாவை பொருத்தவரை எப்போது திரில்லர் படங்களுக்கு வரவேற்பு அதிகம். அதன் அடிப்படையில் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. அதைப் போல ஒரே நாளில் நடக்கும் சில சம்பவங்களை விறுவிறப்பாக காட்சி படுத்தி படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரே வீட்டில் நடக்கும் சம்பவங்களை மைய்யப்படுத்தி படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் முதல் முறையாக ஒரு பாத்ரூமுக்குள் நடக்கு சில ஸ்வாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘ரூம்'. திரில்லர் கதைக்களத்தை கொண்டு உருவாகி இருக்கும் ரூம் படத்தின் டைட்டிலே எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது.
 
இந்த படத்தை  ‘அம்முவாகிய நான்', ‘நேற்று இன்று' ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் இயக்குகிறார்.  இப்படம் பற்றி பேசியயுள்ள இயக்குனர் 'படத்தின் ஹைலைட்டே  பெரும்பகுதியான காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான்.
 
தமிழ் சினிமாவில் புதுமுயற்சியாக திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது' என்றார்.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி, அஸ்வின் கே. தயாரிக்கின்றனர். அபிஷேக் வர்மா கதாநாயகனாக நடிக்கிறார். 'அவள் பெயர் தமிழரசி', 'நீர்ப்பறவை', 'வீரம்' படங்களில் நடித்த மனோசித்ரா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு. வினோத் யஜமான்யா இசை அமைத்துள்ளார்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com