முகப்புகோலிவுட்

'தனுஷுடன் இணையும் பிரபல நடிகை..!!' - அட்டகாசமான 'ஜெயில்' அப்டேட் கொடுத்த ஜி.வி.பி

  | May 29, 2020 15:36 IST
Jail

துனுக்குகள்

  • ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே மற்றும் ட்ராப் சிட்டி என்னும்
  • இந்த படத்தில் பிரபல நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாட உள்ளார் என்று தகவல்கள் வெள
  • அவர் வெளியிட்ட அந்த பதிவில் 'ஜெயில் படத்தின் சிங்கள் விரைவில் வெளியாகும்
ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே மற்றும் ட்ராப் சிட்டி என்னும் ஹாலிவுட் திரைப்படம் உள்பட சுமார் 7-க்கும் மேற்பட்ட படங்கள் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டே உருவான பிரபல இயக்குநர் வசந்தபாலனின் 'ஜெயில்'  படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமானார், அவருக்கு ஜோடியாக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அபர்ணதி நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான படம், வசந்தபாலனின் ‘வெயில்' என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பி-யே இசையமைக்கும் இந்த 'ஜெயில்' படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் முக்கிய வேடங்களில் ராதிகா சரத்குமார், ‘பசங்க' பாண்டி, ‘பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தில் பிரபல நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாட உள்ளார் என்று தகவல்கள் வெளியான நிலையில் இந்த படம் குறித்த சில சூப்பர் அப்டேட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ். அவர் வெளியிட்ட அந்த பதிவில் 'ஜெயில் படத்தின் சிங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் 'காத்தோடு' என்று தொடங்கும் இந்த பாடலை பிரபல நடிகர் தனுஷுடன் இணைந்து நடிகை அதிதி ராவ் பாடியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிரபல பாடலாசிரியர் கபிலன் இந்த பாடலின் வரிகளை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com