முகப்புகோலிவுட்

'மணி சார் எனக்கே ஆப்பு வச்சுருக்காரு..!!' - வெளியானது கார்த்திக் டயல் செய்த எண்..

  | May 21, 2020 08:00 IST
Karthick Dial Seitha En

துனுக்குகள்

 • கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடிப்பில்
 • இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா தனது செல்போனின்
 • கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் டீஸர் வெளியாகி vtv
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான படம் தான் விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படம். இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்றளவும் இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றது. அண்மையில் 10 years of vtv என்ற ஹாஸ் டேக் ட்விட்டர் தளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா தனது செல்போனின் எப்படி தரமான வீடியோக்களை எடுப்பது என்பது குறித்து அதில் கைதேர்ந்த இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனனிடம் சில டிப்ஸ்களை கேட்டறிந்தார். அந்த காணொளியை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். ஆனால் திடீர் என்று அவர் வீடியோ எடுக்க கற்றுக்கொண்டது ஏன் என்று பலரும் குழம்பிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதற்கான விடையை அவர் அளித்துள்ளார். 

இந்நிலையில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தின் டீஸர் வெளியாகி vtv ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று வெளியானது கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம். YOUTUBE தளத்தில் வெளியாகியுள்ள இந்த குறும்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com