முகப்புகோலிவுட்

'எப்படி என்னால் மறக்கமுடியும்' - சுப்ரமணியபுரத்தை நினைவுகூர்ந்த இயக்குநர்..!!

  | July 05, 2020 10:55 IST
12 Years Of Subramaniapuram

துனுக்குகள்

 • தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' என்ற தனது முதல்
 • சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகிய படங்களை இயக்கியுள்ள சசிகுமார் இதுவரை
 • இந்நிலையில் நேற்று ஜூலை 4ம் தேதி சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம்' படம்
தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு வெளியான 'சுப்ரமணியபுரம்' என்ற தனது முதல் படத்திலேயே பெரிய அளவில் வெற்றி கண்டவர் தான் இயக்குநரும் நடிகருமான மஹாலிங்கம் சசிகுமார். ஆரம்பகாலத்தில் பிரபல இயக்குநர் பாலா அவர்களிடம் சேது உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பிறகு அமீர் அவர்களின் மௌனம் பேசியதே மற்றும் ராம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். 

சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகிய படங்களை இயக்கியுள்ள சசிகுமார் இதுவரை 20-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு பிரசாத் முருகேசன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'கிடாரி' திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் நேற்று ஜூலை 4ம் தேதி சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம்' படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. இதை நினைவுகூர்ந்துள்ள சசிகுமார் வெளியிட்ட பதிவில் "என்னால் இந்த நாளை எப்படி மறக்க முடியும்..? 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த கம்பெனி production குடும்பமும் தங்களுடைய முதல் படம் வெளியாகி அதனுடைய ரிசல்ட் என்னவென்று தெரிந்துகொள்ள காத்திருந்த நாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com