முகப்புகோலிவுட்

“துளி கூட நல்லவன் கிடையாது” - ‘மாஸ்டர்’ வில்லன் விஜய் சேதுபதி..!

  | July 02, 2020 19:06 IST
Master

"ரொம்ப கொடூரமான வில்லன், பியூர் ஈவில் தான்"

கூத்துப் பட்டறையில் நடிப்பை பயின்று, புதுப்பேட்டை, குருவி போன்ற படங்கலில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்த பிறகு, இயக்குநர் சீனு ராமசாமியின் தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவகாற்று' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும்  தனித் திறமையை வெளிப்படுத்தி, கோலிவுட்டில் தனக்கெட ஒரு இடத்தையும், நல்ல பெயரும், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் ரசிகர் கூட்டத்தையும் பெற்று, தற்போது ‘மக்கள் செல்வனாக' கொடி கட்டி பரக்கிறார்.

இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி' விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள தனது ‘மாஸ்டர்' பட வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு ஆன்லைன் போர்ட்டலுக்கு அவர் அளித்த பேட்டியில், விஜயின் மாஸ்டர் படத்தில் அவர் தனது கதாப்பாத்திரம் குறித்து கூறியுள்ளார். “மாஸ்டர் படத்தில் நான் வில்லன் தான், ரொம்ப கொடூரமான வில்லன், பியூர் ஈவில் தா, துளி கூட நல்லவன் கிடையாது” என்றும் தனக்கும் அது போன்ற படம் நடிக்க ஆசை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி அடுத்ததாக, கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், க/பெ. ரனசிங்கம், யாதும் ஊரே யாவ்ரும் கேளீர், துக்லக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற பல அற்புதமான திரைப்படங்களை வரிசையாகக் கொண்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com