முகப்புகோலிவுட்

"விஜய் ஆண்டனி Production No. 10" - இயக்குநராக களமிறங்கும் பிரியா கிருஷ்ண சுவாமி..!!

  | July 24, 2020 08:42 IST
Vjp10

துனுக்குகள்

 • அவரது பிறந்த நாளானா இன்று, புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது
 • விஜய் ஆண்டனி புரொடக்ஷன்ஸ் பத்தாவது தயாரிப்பாக உருவாகும் பெயரிடப்படாத
 • 'பாரம்' படத்தை இயக்கிய தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர்
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் குறுகிய காலத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு புகழ் பெற்ற விஜய் ஆண்டனியின் படங்களுக்கு, தமிழ்ப் பட வியாபார எல்லைகளைத் தாண்டியும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. 2016-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படம்,  ஆந்திராவில் பல புதிய சாதனைகளை செய்ததால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாலும் பெரிதும் விரும்பப்படுபவராகிவிட்டார் விஜய் ஆண்டனி.

விடா முயற்சியுடனும் ஆழ்ந்த அர்பணிப்புடனும் களம் காணும் விஜய் ஆன்டனியின் ஒவ்வொரு படத்துக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் நிலையில், அவரது பிறந்த நாளானா இன்று, புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் பி. லிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம் உலகெங்கும் 2021ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

விஜய் ஆண்டனி புரொடக்ஷன்ஸ் பத்தாவது தயாரிப்பாக உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே விஜய் ஆண்டனி அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநராக தமிழில் 'பாரம்' படத்தை இயக்கிய தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் பிரியா கிருஷ்ண சுவாமி இயக்குவதாக விஜய் ஆன்டனி தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com