முகப்புகோலிவுட்

'இது கிருமி யுத்தம்' - புது முயற்சிக்கு அழைப்பு விடுத்த இரா. பார்த்திபன்

  | March 25, 2020 13:44 IST
Parthiban

துனுக்குகள்

  • இதுவரை நிலவி வந்த ஊரண்டங்கு தொடரும் என்று குறிப்பிட்டார்
  • தனது கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்
  • தன்னுடைய வீட்டை அதற்கு தர தயார் என்றும் தெரிவித்தார்
உலக முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பரவி வரும் இந்த கொரோனா நோய்த் தொற்றால் பல்வேறு தொழில்களும் நலிவடைந்து வருகின்றது. கடந்த சில நாட்களாக வெளிநாடுகளின் படமாக்கப்படவேண்டிய பல படங்களின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மார்ச் 31ம் தேதி வரை உள்ளூரிலும் படப்பிடிப்பு போன்ற நிகழ்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று இரவு நாட்டு மக்களைத் தொலைக்காட்சி மூலம் சந்தித்த பிரதமர் மோடி நேற்று இரவு முதல் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) இதுவரை நிலவி வந்த ஊரடங்கு தொடரும் என்று குறிப்பிட்டார். இதுவரை இந்த கொரோனா நோய்க்கு அதிகாரப்பூர்வ மருந்து கண்டறியப்படவில்லை என்பதால் தங்களைத் தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதே சிறந்ததாகக் கருதப்படுகிறது. 

இந்த நோய் குறித்து அடிக்கடி தனது கருத்துக்களைத் தெரிவித்து வரும் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். "இந்த கிருமி யுத்தம், உலக யுத்தத்தை விட கொடியது என்று தெரிவித்தார், மேலும் எதிர்க்கட்சிகளும் பாராட்டும் வண்ணம் செயல்படும் பாரத பிரதமருக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார். அடுத்தபடியாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தார்". 
மேலும் இந்த நோயை எதிர்த்துப் போராட அவசர கால மருத்துவமனைகள் வேண்டும் என்றும் தான் தன்னுடைய வீட்டை அதற்குத் தர தயார் என்றும் தெரிவித்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்