முகப்புகோலிவுட்

“நான் தான் அவருக்கு பொருத்தமாக இருப்பேன்” – பிரபல நடிகை ஓபன் டாக்!

  | November 25, 2019 18:36 IST
Thalaivi Movie

துனுக்குகள்

 • 'தி அயன் லேடி' படம் ஜெயலலிதாவின் பயோ பிக்
 • 'தலைவி' படத்தில் கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்
 • நித்தியா மேனன் தி அயன் லேடி படத்தில் நடித்து வருகிறார்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு 'தலைவி' என்ற பெயரிலும் 'தி அயன் லேடி' என்ற தலைப்பிலும் தயாராகி வருகிறது. இதில் 'தலைவி' படத்தில் கங்கனா ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல 'தி அயன் லேடி' படத்தில் நித்யா மேனன் நடிக்கவுள்ளார்.
 
இந்நிலையில் நித்யா மேனன் தற்போது அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதாவுக்கும் தனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது என்றும். பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம், மேனரிசம் போன்ற விஷயங்களில் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா வேடத்திற்கு தான் பொருத்தமாக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் ‘தலைவி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கும் விதமாகவும் இருந்தது. இந்நிலையில் நித்யா மேனன் இவ்வாறு கூறியிருப்பது. நெட்டிசன்களுக்கு அடுத்த தீனியாக அமைந்திருக்கிறது,
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com