முகப்புகோலிவுட்

'இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை..!!' - சந்திரமுகி 2 குறித்து ஜோதிகா கொடுத்த அப்டேட்..

  | May 26, 2020 07:47 IST
Jothika

துனுக்குகள்

 • ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சந்திரமுகி'
 • இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது
 • நேற்று பொன்மகள் வந்தாள் திரைப்படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த
பி. வாசு இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சந்திரமுகி' திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை கடந்த ஏப்ரல் மாதம் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அறிவித்த லாரன்ஸ், இந்த படத்திற்காக கிடைக்கும் அட்வான்ஸ் பணத்தையும் சேர்த்து, மொத்தமாக ரூ. 3 கோடியை நிதியுதவி செய்வதாகவும் அப்போதே கூறினார். 

இந்நிலையில் இந்த திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது, அந்த படத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடிப்பார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த படத்தில் சந்திரமுகியாக நடித்து அசத்திய நடிகை ஜோதிகா நிச்சயம் இந்த படத்திலும் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். 

இந்நிலையில் நேற்று பொன்மகள் வந்தாள் திரைப்படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜோதிகாவிடம் சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அந்த படத்தில் உங்களுக்கும் பெரிய அளவில் பங்கு உண்டு நீங்கள் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கின்றீர்களா என்று கேட்டபோது. இதுவரை அந்த குறித்த எந்த அழைப்பும் வரவில்லை என்று கூறினார்.  
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com