முகப்புகோலிவுட்

“ஆயுர்வேத காரணங்களுக்காக தினமும் கோமியத்தை குடிக்கிறேன்” இன்ஸ்டா லைவில் கூறிய அக்‌ஷய்..

  | September 11, 2020 20:27 IST
Akshay Kumar

கர்நாடகாவின் பண்டிபூர் காட்டுப் பகுதியில் இந்த சாகச நிகழ்ச்சி படம்பிடிக்கப்பட்டது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆயுர்வேத காரணங்களுக்காக ஒவ்வொரு நாளும் மாட்டுக் கோமியத்தைக் குடிப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.

‘காலா' புகழ் நடிகை ஹூமா குரேஷி மற்றும் லாரா தத்தா பூபதியுடன் தனது வரவிருக்கும் ‘பெல் பாட்டம்' படத்திற்காக தற்போது ஸ்காட்லாந்தில் படப்பிடிப்பு நடத்தி வரும் நடிகர் அக்‌ஷய் குமார், பிரிட்டிஷ் சாகசக்காரர் மற்றும் டிஸ்கவர் சேனலின் பிரபலமான் நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் ஒரு இன்ஸ்டாகிராம் லைவ் உடன் இணைந்தார். அவருடன் இணைந்து ‘Into the wild' எனும் ஒரு சாகச நிகழ்ச்சியில் பங்குபெற்றதைப் பற்றி பேசினார்.

இந்நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரபாகவுள்ளது.  இதன் விளம்பர வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில், யானை சாணத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரை அக்‌ஷய் குடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இந்த இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில், யாயின் பூப் டீயை குடிக்க பியர் கிரில்ஸ் எப்படி ஒப்புகொள்ள வைத்தார் என்று ஹுமா குரேஷி அக்‌ஷயிடம் கேட்டபோது, அக்‌ஷய் கூறினார்: “நான் கவலைப்படவில்லை, நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஒவ்வொரு நாளும் ஆயுர்வேத காரணங்களுக்காக நான் மாட்டு கோமியத்தை குடிக்கிறேன். யானை சாணம் தேநீர் எனக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை” என்றார்.

அவர் கூறிய இந்த பதில் அவரது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், இணையதளத்தில் இப்போது கோமியத்தில் இருக்கும் ஆயுர்வேத நன்மைகள் என்னவென்று ஏராளமானோர் கூகுள் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவின் பண்டிபூர் காட்டுப் பகுதியில் இந்த சாகச நிகழ்ச்சி படம்பிடிக்கப்பட்டது. கிரில்ஸுடன் ஒரு எபிசோட் செய்வது அவருக்கு ஒரு சிறப்பம்சமாகும் என்றும் அக்‌ஷய் ஒப்புக்கொண்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com