முகப்புகோலிவுட்

"ஆனா இவ்ளோ சீக்கிரம் எதிர்பாக்கல" - நடிகர் சதீஷை கலாய்த்த சிவகார்த்திகேயன்..!

  | August 31, 2020 13:55 IST
Sathish

துனுக்குகள்

  • நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில்
  • மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து கலக்கிவருகிறார் நடிகர் சதீஷ்
  • இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பல நகைச்சுவையான காணொளிகளை
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். 'எதிர்நீச்சல்', ‘தமிழ்ப்படம்-2' மற்றும் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து 'கத்தி', 'பைரவா' போன்ற படங்களில் நடித்துள்ள சதீஷ், தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை ஈர்த்தவர். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சதீஷ், பிரபல நடிகரும் நாடக கலைஞருமான மறைந்த திரு. Crazy மோகன் அவர்களுடன் 8 ஆண்டுகள் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2006ம் ஆண்டு crazy மோகன் வசனத்தில் வெளியான ஜெர்ரி என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகராக களமிறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழ் படம், மதராசபட்டினம், மரீனா, தாண்டவம் போன்ற பல நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் சதீஷ். கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து கலக்கிவருகிறார் நடிகர் சதீஷ். 

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பல நகைச்சுவையான காணொளிகளை வெளியிட்டு வருகிறார் சதீஷ். தற்போது பிரபல ஹாலிவுட் கதாபாத்திரம் லோக்கியோடு இணைந்து நகைப்பூட்டும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை கண்ட நடிகர் சிவகார்த்திகேயன் "இத எதிர்பார்த்தேன் ப்ரோ, ஆனா இவ்ளோ சீக்கிரம் இப்படி ஆகும்னு எதிர் பாக்கல" என்று கூறி அவரை கிண்டல் செய்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com