முகப்புகோலிவுட்

"அவர் பேசப் பேச கண்கள் கசிந்தன" - அமிதாப்பிற்காக பிராத்திக்கும் இரா. பார்த்திபன்..!!

  | July 13, 2020 12:08 IST
Amitab Bachan

துனுக்குகள்

 • இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே
 • பிரபல நடிகருக்கும் இயக்குநருமான பார்த்திபன் தற்போது வெளியிட்டுள்ள
 • மகனின் கைகளை பற்றியபடி நலமோடு திரும்ப பிரார்த்தனைகள்
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8,49,553 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 5,34,621 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 22,674 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல அமிதாப் பச்சன் அவர்களின் குடும்பத்தில் நால்வருக்கு தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமிதாப் பச்சன், அவர் மகன் நடிகர் அபிஷேக் பச்சன், அபிஷேக்கின் மனைவியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகள் ஆகிய நால்வருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் அமிதாப் அவர்களின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் விரைவில் நலமோடு வீடு திரும்ப பலரும் பிராத்தனை செய்து வருகின்றனர். 

பிரபல நடிகருக்கும் இயக்குநருமான பார்த்திபன் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "அமிtop!ரசிகனாய் என் அபிமான நட்சத்திர வரிசையில் உயர்நிலையில் நிற்பவர்..! Positive-இன்றல்ல,என்றுமே நினைப்பவர்-உணர்வலைகளை பரப்புபவர். மருத்துவமனையிலிருந்து அவர் பேசப் பேச கண்கள் கசிந்தன மூப்பு என்ற ஒரே பலவீனத்தை தவிர மிக strong மனிதர். மகனின் கைகளை பற்றியபடி நலமோடு திரும்ப பிரார்த்தனைகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com