முகப்புகோலிவுட்

"எதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட்" - தல-யின் வலிமை, அப்டேட் கொடுத்த கார்த்திகேயா.!

  | September 22, 2020 13:28 IST
Valimai

துனுக்குகள்

 • RX 100, 90ML போன்ற பல தெலுங்கு படங்களில் கதையின் நாயகனாக வந்து அசத்திய
 • தல ரசிகர்கள் பொதுவாக அஜீத் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் மீதும்
 • கொஞ்சம் பொறுமையா இருங்க.. நீங்க எதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட்
RX 100, 90ML போன்ற பல தெலுங்கு படங்களில் கதையின் நாயகனாக வந்து அசத்திய பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று நேற்று வெளியானது. பிரபல நடிகர் தான்யா ரவிச்சந்திரன் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக நேற்று அவருடைய பிறந்தநாளில் பல தமிழ் ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். 

கார்த்திகேயா தற்போதுஹ் தல அஜீத் குமாரின் வலிமை படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தல ரசிகர்கள் பொதுவாக அஜீத் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் மீதும் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து ஹாட்டான ஒரு தகவலை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் "என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய அஜீத் சார் ரசிகர்களுக்கு எனது நன்றிகள். வலிமை படத்தில் என்னுடைய கதாபாத்திரம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். கொஞ்சம் பொறுமையா இருங்க.. நீங்க எதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட் ஒன்னு வரப்போகுது. என்ன நான் சொல்றது" என்று கூறி ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.   
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com