முகப்புகோலிவுட்

தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்ட யுவன்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

  | July 04, 2020 17:28 IST
Yuvan Shankar Raja

"நான் இஸ்லாத்திற்கு முன் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தையும் கொண்டிருந்தேன், அதுவே எனது மோசமான பகுதியாகும்"

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். 23 ஆண்டுகள் கடந்து அவரது சுவாரஸ்யமான உழைப்புடன், சிறந்த இயக்குநர்கள் மற்றும் நட்சத்திரங்களின் தேர்வாக இருந்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா தற்போது சிம்புவின் ‘மாநாடு' மற்றும் ‘தல' அஜித்தின் ‘வலிமை' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

சமீபத்தில், பாலிவுட் இளம் நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து பல நடிகர் நடிகைகள் சினிமா துறையில் அவர்களுக்கு ஏற்படும் மனழுத்தம், தொழில்துறையில் நிலவும் கஷ்டங்கள், அழுத்தங்கள் பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

நேற்று, யுவன் சங்கர் ராஜா ஆன்லைனில் ரசிகர்களுடன் ஒரு கேள்வி பதில் அமர்வைக் கொண்டிருந்தார், அதில் ரசிகர்கள் கேட்ட பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் யுவனின் மோசமான பயம் மற்றும் அதை எவ்வாறு சமாளித்தார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் “நான் இஸ்லாத்திற்கு முன் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தையும் கொண்டிருந்தேன், அதுவே எனது மோசமான பகுதியாகும். தற்கொலை எண்ணங்களை வெல்ல இஸ்லாம் எனக்கு உதவியது” என யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார். யுவனின் தற்கொலை எண்ணங்கள் குறித்த இந்த அறிக்கை அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் பதிலளித்த அந்த வீடியோ க்ளிப் தற்போது தீயாக பரவிவருகிறது.

இந்த உரையாடலின்போது, ‘மின்னலே நீ வந்ததேனடி' எனும் ஏ.ஆர் ரகுமானின் பாடலையும், ‘3' படத்திலிருந்து ‘போ நீ போ'  எனும் அனிருத் இசையமைத்த பாடலையும் தனக்கு விருப்பமான பாடல்கள் என அதை பாடவும் செய்துள்ளார்.    தொடர்புடைய விடியோ

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com