முகப்புகோலிவுட்

'நான் 58% தான் எடுத்தேன்' - மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மாதவன்..!!

  | July 16, 2020 11:14 IST
Cbse Board Exam Result

துனுக்குகள்

 • சிபிஎஸ்இ, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை நேற்று
 • தங்கள் யூகித்ததை விட அதிக அளவில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு
 • நான் பொதுத்தேர்வில் 58 சதவிகித மதிப்பெண் தான் எடுத்தேன்.
சிபிஎஸ்இ, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை நேற்று அறிவித்தது. கடந்த கல்வி ஆண்டில், 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 91.46 சதவீதம் பேர் தேர்த்திப் பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மொத்தமாக பதிவு செய்யப்பட்ட 18,85,885 மாணவர்களில், 18,73,015 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 17,13,121 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். 

மாணவிகளில், 93.31 சதவீதம் பேரும், மாணவர்களில், 90.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளார்கள். மூன்றாம் பாலின மாணவர்களில் 78.95 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் குறித்து பிரபல நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

மாதவன் வெளியிட்ட பதிவில் "தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது, தாங்கள் யூகித்ததை விட அதிக அளவில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதே சமயம் மற்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நான் பொதுத்தேர்வில் 58 சதவிகித மதிப்பெண் தான் எடுத்தேன். ஆகையால் எதற்கும் நீங்கள் கவலை படாதீர்கள் ஆட்டம் இன்னும் தொடங்கவே இல்லை" என்று அந்த பதில் கூறி மாணவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com