முகப்புகோலிவுட்

"இது முற்றிலும் தவறான செய்தி" - விளக்கம் கொடுத்த தேசிங்கு பெரியசாமி..!

  | August 02, 2020 19:02 IST
Super Star Rajinikanth

துனுக்குகள்

  • அண்மையில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேசிங்கு
  • இந்நிலையில், சூப்பர் ஸ்டாருக்கும் தனக்குமான தனிப்பட்ட உரையாடல் சோஷியல்
  • அது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் அது தான் சூப்பர் ஸ்டார் அவர்களுடன்
துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது. இப்படம் விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, நல்ல வசூலையும் ஈட்டிவந்தது. துல்கர் சல்மான் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேரடி தமிழ் படமாக இப்படத்தில் நடித்தார். குறிப்பாக இந்த படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ள தேசிங்கு பெரியசாமிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இயக்குநர் தேசிங்கு அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை KKK படத்தின் முதல் காட்சியிலேயே நிரூபித்திருப்பர். 

அண்மையில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமியை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூப்பர்... excellent.. பெரிய future இருக்கு உங்களுக்கு என்று கூறிய சூப்பர் ஸ்டார், மேலும் தனக்கு ஒரு கதை எழுதுங்கள் என்று அவரிடம் கூறியது தேசிங்கு அவர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டுசென்றது. இந்த ஆடியோ இணையத்தில் லீக்கனதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீ போல் பரவியது. மேலும், ரஜினிகாந்த் பாராட்டியதற்காக மேலும் இயக்குநருக்கு வாழ்த்துகள் குவிந்தன.

இந்நிலையில், சூப்பர் ஸ்டாருக்கும் தனக்குமான தனிப்பட்ட உரையாடல் சோஷியல்  மீடியாவில் கசிந்தது தனக்கு வருத்தமளிப்பதாக தேசிங்கு பெரியசாமி வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இன்று அவர் சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக ஒரு தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட நிலையில், அது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் அது தான் சூப்பர் ஸ்டார் அவர்களுடன் 2018ம் ஆண்டு எடுத்த புகைப்படம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com