முகப்புகோலிவுட்

'நான் எப்போதுமே ரெடி' - விஜய் பற்றிய ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த யுவன்..!!

  | July 06, 2020 07:53 IST
Yuvan Shankar Raja

துனுக்குகள்

 • 1997ம் ஆண்டு சரத்குமார், பார்த்திபன் மட்டும் நக்மா நடிப்பில் வெளியான
 • ஒவ்வொரு தமிழரும் இசையை அனுபவிக்கத் துவங்கிய வயதிலிருந்து வாழ்க்கை
 • அதற்கு Iam Always Ready என்று பதில் அளித்துள்ளார் யுவன்
1997ம் ஆண்டு சரத்குமார், பார்த்திபன் மட்டும் நக்மா நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. என்னதான் இசைஞானியின் பிள்ளையாக இருந்தாலும் இசைத் துறையில் தனக்கென தனி இடத்தில் கொடி கட்டி பறக்கும் யுவன் ஷங்கர் ராஜா, அண்மையில் தனது இசை வாழ்க்கையில் 23 ஆண்டுகளை நிறைவு செய்து, அடுத்த உச்சத்தை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளார்.

ஒவ்வொரு தமிழரும் இசையை அனுபவிக்கத் துவங்கிய வயதிலிருந்து வாழ்க்கை முடிவுக்கு வரும் வரை உருகி உருகிக் கேட்கும் பாடல்களில் பல இவர் இசையமைத்ததும், பாடியதும் தான் என்றால் அதில் மாற்றுக்கருத்து இருக்காது. வேறு எந்த ஒரு இசையமைப்பாளரின் தீவிர ரசிகராக இருந்தாலும், இவரின் இசையில் ஒரு சில பாடல்கள் கேட்கும் போது, அந்த சுகத்தை வேறு எங்கும் அனுபவிக்க முடியாது என்பதை உணர்வார்கள்.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடும் இவர் சில தினங்களுக்கு முன்பு அவ்வாறு ரசிகர்களுடன் உரையாடியபோது ஒருவர் "தலைவா தளபதியுடன் படம் பண்ணுங்க என்று ஆசையாக கேட்க" அதற்கு I am Always Ready என்று பதில் அளித்துள்ளார் யுவன்.

  தொடர்புடைய விடியோ

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com