தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்..? சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்? என்று இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்கள் இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை என்றும், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2.77 ஏக்கர் நிலத்தில் கோயில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதோடு, அயோத்தியில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் மத்திய, மாநில அரசுகள் 5 ஏக்கர் இடத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???”
— pa.ranjith (@beemji) November 10, 2019
அத்துடன் கோயில் கட்டுவதற்கான அமைப்பை 3 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும், நிலத்தை மத்திய அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.