முகப்புகோலிவுட்

"ஜகம் சுகமடைந்ததும்...ஜகமே தந்திரம்..!" - 'கலக்கலான' போஸ்ட்ரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

  | May 01, 2020 15:42 IST
Karthick Subbaraj

துனுக்குகள்

 • தனுஷின் இந்த 40-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்
 • மே 1-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில்
 • இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மே தினமான இன்று இந்த படத்தின் போஸ்டர் ஒன்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல்முறையாக தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‘ஜகமே தந்திரம்'. தனுஷின் இந்த 40-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி செம வைரலானது. இப்படத்தில் ஐஸ்வரியா லெக்ஷ்மி, சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் பேனரில் எஸ். சசிகாந்த் மற்றும் சக்கரவர்த்தி ராமச்சந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர். 

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா கேமரா வேலைகளைக் கையாண்டிருக்க, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். கேங்ஸ்டர் த்ரில்லரான இப்படம் வரும் மே 1-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் லண்டனில் நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில், தற்போது உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் பரவல் காரணமாக, பட வெளியீடு தள்ளிப்போனது. 

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மே தினமான இன்று இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "இந்த வைரஸ் வராமல் இருந்திருந்தால் இன்று படம் வெளியாகி இருக்கும் என்று கூறிய அவர் ஜகம் சுகமடைந்ததும்...ஜகமே தந்திரம்!!" என்று கூறியுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com