முகப்புகோலிவுட்

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த இளைய திலகம்!

  | October 18, 2019 16:37 IST
Ponniyin Selvan

துனுக்குகள்

 • பொன்னியின் செல்வம் நாவலை எழுத்தாளர் கல்கி எழுதியுள்ளார்
 • இந்த நாவலை படமாக்கும் முயற்சியை செய்துவருகிறார் மணிரத்னம்
 • இந்த பத்தில் தற்போது பிரபு இணைந்துள்ளார்
இயக்குநர் மணிரத்னம் எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் நடிகைகள் தேர்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
 
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ். ஐஷ்வாயா ராய் மேலும் மலையாள நடிகர் ஜெயராம், பார்த்திபன், அமலா பால், ஐஷ்வர்யா லட்சுமி, உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த படத்தில் இணைந்துள்ளது குறித்து மலையாள நடிகர் ஜெயராம், ஐஷ்வர்யா ராய் இருவரைத் தவிற வேறு எந்த நடிகரும் உறுதி செய்யவில்லை. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் பழுவேட்டரையர் வேடத்துக்கு தேர்வான நடிகர்சத்யராஜ் படத்தில் இருந்து விலகி விட்டதாகவும். அந்த கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும் லைகா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது எனவும் செய்திகள் வெளியானது. ஆனல் இதுகுறித்து மனிரத்னம் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com