முகப்புகோலிவுட்

“பாலுவிற்கு நான் இசை அமைப்பாளர் இல்லை ஆர்மோனிஸ்ட்” இளையராஜா நெகிழ்ச்சி..!

  | June 03, 2019 12:57 IST
Isaignani Concert 2019

துனுக்குகள்

  • இளையராஜா பிறந்தநாள் நேற்று கொண்டாப்பட்டது
  • இளையராஜாவிற்கு வயது 76
  • இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு இளையராஜா கட்டிடம் கட்டித்தருவதாக உறுதி

நேற்று இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்தநாள் கொண்டாப்பட்டது. இதற்காக சென்னையை ஒட்டி உள்ள இ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.

கடந்த சில மாதங்களாகவே இசைஞானியின் பிறந்த நாள் விழா தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு வந்தது. சமீபத்தில் தென்னிந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. ஆனால் இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் நண்பரான எஸ்.பி.பி. கலந்துக்கொண்டு பாடவில்லை என்று ரசிகர்கள் கவலையுற்றனர். அதற்கு காரணம் இளையராஜாவிற்கும், எஸ்.பி.பிக்கும் கடந்த ஆண்டுகளில் நடந்த ராயல்டி பிரச்னை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி கலந்துக்கொண்டு பல்வேறு பாடல்களை பாடி அசத்தினார். ஒரே மேடையில் இருவரையும் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். எஸ்.பி.பி. இளையராஜாவிற்கு நெகிழ்ச்சியாக கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது “பாலுவிற்கு நான் இசை அமைப்பாளராக வேலை பார்த்ததை விட ஆர்மோனிஸ்ட்டாக இருந்ததுதான் அதிகம்” என இளையராஜா நெகிழ்ச்சியாக பேசினார். இதை கண்ட ரசிகர்கள் மெய் சிலிர்த்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்