முகப்புகோலிவுட்

'எனக்கு திருமணமா..?' - பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி சரத்குமார்

  | May 19, 2020 13:38 IST
Varalakshmi

துனுக்குகள்

 • சிக்கலான ஊரடங்கு நிலவும் காலத்தில் தனது சமூக வலைத்தளங்கள்
 • சில செய்திகள் வலம்வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டு அது குறித்து
 • எனது திருமணம் குறித்து வதந்திகள் பரவி வருவதை நான் அறிவேன்
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார், தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு, பாலா இயக்கத்தில் வெளியான தாரைத்தப்பட்டை, மற்றும் சண்டக்கோழி, சர்கார் போன்ற படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோன்று ஒவ்வொரு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சில படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் அளவிற்கு குறுகிய காலத்தில் இவர் தன்னை தயார்படுத்தி கொண்டுள்ளது இவரின் சிறப்பு. 

இந்த சிக்கலான ஊரடங்கு நிலவும் காலத்தில் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் பல விழிப்புணர்வுகளையும் குறிப்பாக  நடக்கும் வன்முறைகள் குறித்தும் அடிக்கடி இவர் பேசிவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்கப்போகிறது. அதனால் நான் சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என்று சில செய்திகள் வலம்வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டு அது குறித்து தனது விளக்கத்தை கொடுத்துள்ளார். 

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "எனது திருமணம் குறித்து வதந்திகள் பரவி வருவதை நான் அறிவேன். எனது திருமணத்தில் ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளார்கள் என்று தெரியவில்லை. மேலும் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டால் என் வீட்டின் கூரைமேல் ஏறி அனைவருக்கும் உரக்கச்சொல்வேன். ஆகவே இப்போதைக்கு நான் திருமணம் செய்து கொள்ளவில்லை, படங்கள் நடிப்பதிலிருந்து விளக்கவும் இல்லை", என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com