முகப்புகோலிவுட்

'அவளின்றி நான் இல்லை' - மகளுடன் சினேகா வெளியிட்ட புகைப்படம்

  | March 10, 2020 10:19 IST
Sneha

துனுக்குகள்

 • அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது
 • சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
 • கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை மணந்த இவர்
பிரபல நடிகை கே.ஆர்.விஜயா அவர்கள் 'புன்னகை அரசி' என்ற பட்டத்தை வெகு நாட்களாகத் தன்வசம் வைத்திருந்தார். அதன் பிறகு 2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'Ingane Oru Nilapakshi' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் மீண்டும் புன்னகை அரசி என்ற பட்டத்தைப் பெற்றார். அவர் தான் தமிழில் 2000ம் ஆண்டு வெளியான என்னவளே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுகாஷினி ராஜாராமன் என்ற இயற்பெயர் கொண்ட நடிகை சினேகா. 

ஆட்டோகிராப், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், பார்த்திபன் கனவு, புதுப்பேட்டை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தவர். தனது இயல்பான நடிப்பாலும் வசீகரிக்கும் சிறப்பாலும் ரசிகர்கள் மனதைக் கொள்ளைகொண்டவர் சினேகா. கமல், விஜய், அஜித், விக்ரம் மற்றும் சூர்யா என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை மணந்த இவர் தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று வருகிறார். 

ஏற்கனவே விஹான் என்ற நான்கு வயது ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. Aadhyantha என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பெண் குழந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை மகளிர் தினமான நேற்று தாய் சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com