முகப்புகோலிவுட்

'எல்லாம் தலைவிக்காகத் தான்' - உடல் எடையை அதிகரித்த கங்கனா ரனாவத்

  | March 07, 2020 08:17 IST
Kangana Raanut

துனுக்குகள்

 • ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்
 • விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சைலேஷ் ஆர். சிங்க் இணைந்து தயாரித்துள்ளனர்
 • படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத் தனது உடல் எடையை அதிகரித்து உள்ளார்
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில், ஜெயலலிதாவாகப் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். தலைவி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஎல் விஜய் இயக்குகிறார். தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கும் இப்படத்தை விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சைலேஷ் ஆர். சிங்க் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வரும் 2020 ஜூன் மாதம் 26-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதே போல செல்வி ஜெயலலிதா மற்றும் நடிகை கங்கனா ஆகியோரை ஒப்பிட்டு ஒரு புகைப்படமும் வெளியானது. எம்.ஜி.ஆர் பிறந்த நாளன்று நடிகர் அரவிந்த்சாமி இந்த படத்தில் நடித்த சிறிய காட்சி ஒன்று வெளியானது. 

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத் தனது உடல் எடையை அதிகரித்து உள்ளார். மேலும் அவர் தனது பயிற்சியாளருடன் உரையாடி தனது எடையைச் சரி பார்க்கும் வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com