முகப்புகோலிவுட்

இந்தியன் 2 விபத்து : கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு..!

  | March 17, 2020 14:48 IST
Indian 2 Accident

இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 19-ஆம் தேதி கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக, நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்திவருகிறது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், சம்பவ இடத்தில் விபத்து நடந்தது குறித்து நடித்துக் காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து வற்புறுத்துவதாக நடிகர் கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக நீதிபதி இளந்திரையன் முன் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com