முகப்புகோலிவுட்

கொரோனா பூட்டுதல் : ஏழைகளுக்கு தினமும் உணவளிக்கும் ரகுல் ப்ரீத் சிங்..!

  | April 04, 2020 16:44 IST
Rakul Preet Singh

ரகுல் ப்ரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன்-2’ மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று, நாட்டையே அச்சுறுத்திவரும் நிலையில், தற்போது நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. அதையடுத்து நாட்டின் பல கோடி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். பிரபலங்களும் நிதி கொடுத்து உதவுவதன் மூலமோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்குவதன் மூலமோ தங்கள் பங்கைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் குர்கானில் உள்ள தனது வீட்டின் அருகே வசிக்கும் 200 ஏழை குடும்பங்களுக்கு உதவிவருகிறாராம். அவர் தன் குடும்பத்துடன் இணைந்து ஏழைகளுக்கு உணவு தயாரித்து விநியோகிப்பதாக கூறப்படுகிறது. இந்த நாடு தழுவிய பூட்டுதல் நீக்கப்படும் வரை இவர் இந்த உதவியை செய்வார் என நம்பப்படுகிறது.

ரகுல் ப்ரீத் சிங் தற்போது கமல்ஹாசனின் ‘இந்தியன்-2' மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் கடைசியாக சூர்யாவுக்கு ஜோடியாக NGK திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com