முகப்புகோலிவுட்

‘சில்லுக்கருப்பட்டி’ இயக்குநரின் அடுத்த படத்திற்காக காத்திருக்கும் இயக்குநர் சங்கர்!

  | June 20, 2020 14:10 IST
Director Shankar

வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், அருண் பிரபு புருஷோத்தமன், எச். வினோத் ஆகிய இயக்குநர்களின் படைப்புகளை சங்கர் பாராட்டியுள்ளார்.

கடைசியாக 2018-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘2.0' திரைப்படத்தை இயக்கியிருந்த ‘பிரம்மாண்ட' இயக்குநர் சங்கர், தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2' திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

அண்மையில் ஒரு நேர்காணலில், தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த இயக்குநர்களைப் பற்றி இயக்குநர் சங்கர் மனம் திறந்து கூறியுள்ளார். வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், ‘அருவி' புகழ் அருண் பிரபு புருஷோத்தமன், ‘தீரன் ஆதிகாரம் ஒன்று' புகழ் எச். வினோத் ஆகிய இயக்குநர்களின் படைப்புகளை சங்கர் பாராட்டியுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் வென்ற ‘சில்லுக்கருப்பட்டி' பட இயக்குநர் ஹலிதா ஷமீமின் பணியையும் சங்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், ஹலிதாவின் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் ‘மின்மினி' திரைப்படத்தைப் பார்க்க காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

மின்மினி படத்தில், புதுமுகங்களைத் தவிர ‘பாபனாசம்' படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர் அனில் நடிக்கிறார்.  இப்படத்தில் குழந்தை நடிகர்களுடன் படப்பிடிப்பு நடத்திய ஹலிதா, அவர்களை வளர்ந்தவர்களாகக் காட்டப்படும் பகுதிகளை படமாக்க அவர்கள் வளரும் வரை காத்திருக்கிறாராம்.

    தொடர்புடைய விடியோ

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com