முகப்புகோலிவுட்

'இந்தியன் 2' - 40 கோடி ரூபாயில் மிரட்டும் ஒரே ஒரு சண்டைக்காட்சி!

  | October 19, 2019 15:02 IST
Indian 2

துனுக்குகள்

 • படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
 • இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்
 • படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது
சங்கர் இயக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘இந்தியன்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவருகிறார் இயக்குநர் சங்கர்.
 
முதல் பாகத்தில் இந்தியன் தாத்தாவாக நடித்த கமல் இந்த படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போத வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. மேலும் இப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவாணி சங்கர், விவேக், சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் இப்பத்தில் நடித்து வருகிறார்கள்.
 
திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது போபால் நகரில் சுமார் 2,000 துணை நடிகர்களுடன் நடைபெற்றுவருகிறது. இந்த படப்பிடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 40 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சியை ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் வடிவமைத்து வருகிறார். இப்படத்திற்கு ஆர்.ரத்தினவேலு , ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com