முகப்புகோலிவுட்

'இந்தியன் 2' வெளியான புகைப்படங்களால் படக்குழு அதிர்ச்சி!

  | October 24, 2019 18:15 IST
Indian 2

துனுக்குகள்

  • தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்
  • இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
  • கமல் குதிரையில் இருக்கும் படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கமல் நடிப்பில் இயக்கநர் சங்கர் இயக்கிய ‘இந்தியன்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது இயக்குநர் சங்கர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்காக பல்வேறு பணிகளுக்கிடையில் நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார் கமல்ஹாசன். சென்னை, ஆந்திரா என இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால்,ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவாணி சங்கர், பாபி சிம்ஹா, விவேக், ஆர்.ஜே.பாலாஜி, சமுத்திரகனி, டெல்லி கணேஷ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் கமல்ஹாசன் குதிரையில் செல்வது போன்று அமைந்துள்ளது.
இப்படத்தை அடுத்து கமல்ஹாசன் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவிருக்கிறார் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்