முகப்புகோலிவுட்

'இந்தியன் 2' படப்பிடிப்பில் விபத்து - மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட வழக்கு

  | February 22, 2020 11:54 IST
Lyca Production

வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்

துனுக்குகள்

  • 'இந்தியன் 2' படப்பிடிப்பில் விபத்து
  • மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட வழக்கு
  • லைக்கா சார்பிலும் நிதி உதவி அளிக்கப்பட்டது
சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படமான ‘இந்தியன்-2-வின் படப்பிடிப்பு பணிகள் கடத்த சில நாட்களாகச் சென்னை பூந்தமல்லியில் உள்ள EVP Film Cityயில் நடந்த வந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அங்குப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அங்கிருந்த ராட்சச கிரேன் ஒன்று கீழே விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி ஒரு உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயங்களுடன் சிலர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் சார்பிலும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பிலும் நிதி உதவி அளிக்கப்பட்டது. தற்போது இந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது ஏற்கனவே 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த படப்பிடிப்பில் நடந்த விபத்து குறித்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்