முகப்புகோலிவுட்

‘மரண மாஸ்’ பாடலுக்கு ஆடிய இந்திய டான்ஸ் டீம்..! அமெரிக்காவே வாயைப் பிளந்துடுச்சு.!

  | February 12, 2020 13:04 IST
Marana

துனுக்குகள்

 • பிரபலமான 'மரண மாஸ்' பாடல் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்றது.
 • இப்பாடலை அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.
 • இப்பாடலுக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்தது.

‘அமெரிக்கா காட் டேலண்ட்' நிகழ்ச்சியில் ரஜினியின் ‘மரண மாஸ்' பாடலுக்கு இந்திய நடனக் குழு ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

America Got Talent நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும். உலகம் முழுவதிலுமிருந்து பலவிதமான திறமைகளைக் கொண்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுவருகின்றனர். இதில் ஆடல், பாடல், மாயாஜால வித்தைகள், சாகசங்கள் என பிரம்மிக்க வைக்கும் திறன்கள் இங்கு வெளிப்படுத்தப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில், பங்கு பெறுவதே பெருமையாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த ‘V Unbeatable dance group' நடனக்குழு இந்நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று வரை சென்றுள்ளது. இந்த இறுதிச் சுற்றில் அவர்களின் நடனம் தற்போது உலகம் முழுக்க வைரலாகிவருகிறது. முக்கியமாக அவர்கள் ஆடிய பாடல் தான் ஹைலைட். பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடலான ‘மரண மாஸ்' பாடலுக்கு தான் அவர்கள் ஆடினர். இப்பாடலை அனிருத் இசையமைத்து அவரே பாடியுள்ளார். இந்த பாடலுக்கு அவர்களின் ஆடிய சிறப்பான நடனத்தைப் பார்த்து AGT அரங்கமே வாயைப் பிளந்து பார்த்துள்ளனர். மொத்த பர்ஃபாமன்ஸையும் பார்த்து அசந்த அந்நிகழ்ச்சியின் நடிவர்கள் அக்குழுவை மிகவும் பாராட்டியுளனர்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com