முகப்புகோலிவுட்

பிகில் பாண்டியம்மாவா இது..! அனைவரையும் ஆச்சரியப் படுத்திய ரோபோ சங்கர் மகள்..!

  | February 22, 2020 08:53 IST
Pandiyamma

விஜயின் பிகில் திரைப்படத்தில் ‘பாண்டியம்மா’ எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இந்திரஜா சங்கர்.

விஜயின் பிகில் திரைப்படத்தில் ‘பாண்டியம்மா' எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இந்திரஜா சங்கர். இவர் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளாவார். பிகில் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலூன்றியிருக்கும் இவர், சிறந்த நடனக் கலைஞரும் ஆவார்.

இந்த படத்தில், கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்துள்ள இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு, படத்தின் இடையில் விஜயுடன் ஒரு துள்ளலான இசைக்கு நடனமும் ஆடியுள்ளார். படத்தில் சிறந்த காட்சிகள் என ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டவைகளில், இவர் நடித்த க்ளைமேக்ஸ் காட்சியும் ஒன்று எனக் கூறலாம்.

இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகின்றன. இந்த புகைப்படங்கள் மூலம் தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்திரஜா. ஒரு கலக்கலான உடையில் அழகான போட்டொஷூட் நடத்தி வெளியிட்ட இந்த புகைப்படத்தைப் பார்த்து பலரும் அசந்துபோயுள்ளனர். “நிகழ்த்திக் காட்டு, ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழத்து” எனும் பாசிட்டிவான இவரது இந்தப் பதிவு பலரின் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் இணையத்தில் பெற்றுவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்