முகப்புகோலிவுட்

இசை ஞானி இசையில் 'கமனம்' : பாடகியாக களமிறங்கும் பிரபல நடிகை நித்யா மேனன்..!

  | September 18, 2020 12:06 IST
Isai Gnani Ilayaraja

துனுக்குகள்

 • குழந்தை நட்சத்திரமாக இருந்து அதன் பிறகு சிறந்த நடிகையாக மாறிய கதையின்
 • காஞ்சனா, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள்
 • 'கமனம்' என்ற பன்மொழி படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகி உள்ளார்
குழந்தை நட்சத்திரமாக இருந்து அதன் பிறகு சிறந்த நடிகையாக மாறிய கதையின் நாயகிகள் இந்திய திரையுலகில் அதிகம். அந்த வழியில் தனது 10வது வயதில் நடிக்க வந்து அதன் பிறகு இப்போது டாப் நடிகைகள் வரிசையில் இடம் பிடித்துள்ளவர் தான் பிரபல நடிகை நித்யா மேனன். மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் '180' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார். 

காஞ்சனா, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் குடியேறினார் நித்யா. அதன் பிறகு மெர்சல் படத்தின் தளபதியின் நாயகியாக களமிறங்கி தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தினர். இறுதியாக தமிழில் இவர் நடித்த படம், உதயநிதி நடிப்பில் வெளியான சைக்கோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'கமனம்' என்ற பன்மொழி படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகி உள்ளார் நித்யா மேனன். ஷைலபுத்ரி தேவி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ள நித்யா இந்த படத்தில் ஒரு பாடகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு அம்சமாக இசை ஞானி இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com