முகப்புகோலிவுட்

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் டப்பிங் இனிதே துவங்கியது...

  | May 08, 2019 17:14 IST
Irandaam Ulagaporin Kadaisi Gundu

துனுக்குகள்

 • இந்த படத்தை இயக்குநர் அதியன் ஆதிரை இயக்குகிறார்
 • இந்த படத்தை இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கிறார்
 • இந்த படத்தில் அட்ட கத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்
இயக்குந பா.இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தை தயாரித்து வருகிறார் இயக்குர் பா.இரஞ்சித்.

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகளை இன்று துவங்கி இருக்கிறது படக்குழு. இதைப்பற்றி கூறியுள்ள படக்குழு,

"பெரும் கொண்டாட்டத்தோடு குண்டு  படத்தை  ஆரம்பித்து ஒவ்வொரு தருணங்களையும் , நிகழ்வுகளையும் உண்மையின் பக்கம் நின்று ஜனரஞ்சகமாக அனைவரும் ரசித்து கொண்டாடும் வகையில் ஒரு படைப்பை உருவாக்கி இன்று படத்தின் டப்பிங் பணிகளை துவங்குகிறோம். 
தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பின் இரண்டாவது தயாரிப்பு தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஒரு படைப்பாக இருக்கும் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இயக்குனர் அதியன் ஆதிரை வட தமிழகத்தின் வாழ்வியலை அனைவரும் குடும்பமாக ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறார்"

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com