முகப்புகோலிவுட்

"தமிழ் சினிமாவின் புதிய பாய்ச்சல்" படப்பிடிப்பை முடித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”

  | March 18, 2019 11:57 IST
Irandam Ulagaporin Kadaisi Gundu

துனுக்குகள்

  • இந்த படத்தை இயக்குநர் அதியன் ஆதிரை இயக்குகிறார்
  • இப்படத்தை இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கிறார்
  • இப்படம் இரஞ்சித்தின் இரண்டாது தயாரிப்பு

ஒரு படைப்பு உன்னிடம் உரையாடினால், கேள்விகளை எழுப்பினால், உன்னை நீயே சுயபரிசோதனை செய்ய தூண்டினால் அதுதான் அந்த படைப்புக்கு கிடைக்கு மிகப்பெரிய வெற்றி. அத்தகைய வெற்றியை தனது முதல் படத்திலே கொடுத்தவர் இயக்குநர் மாரிசெல்வராஜ். “பரியேறும் பெருமாள்” திரைப்படம் இந்த சமூகத்தில் ஒரு நேர்மையான உரையாடலை நிகழ்த்தியது. அதன் தாக்கம் இன்னுமும் இந்த சமூகத்தை உரையாட வைத்துருக்கொண்டிருக்கிறது. இத்தகைய படைப்பை தன்னுடைய முதல் தயாரிப்பாக கொடுத்தவர் இயக்குநர் பா.இரஞ்சித். திரைப்படங்களை இயக்குவதோடு சிறந்த அரசியல் படைப்புகளை இந்த சமூகத்திற்கு கொடுக்க நீலம் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறார். அதன் அடிப்படையில் பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து "நீலம் புரொடக்‌ஷன்ஸ்" சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் "இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு".

நடிகர் தினேஷ், ஆனந்தி, முனீஷ்காந்த், ரித்விகா, லிஜீஷ், மாரிமுத்து ஆகியோர் நடிக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் உதவி இயக்குநர் அதியன் ஆதிரை இயக்குகிறார்.சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடந்து வந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. இரண்டு கட்டமாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் உற்சாகமான கொண்டாட்டத்துடன் நிறைவு செய்தனர். இப்படத்தை பற்றி பேசிய இயக்குநர் ஆதிரை,

"திட்டமிட்டதை விட சீக்கிரமே படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். அனைவரும் முழு நிறைவாக வேலை செய்திருக்கிறோம். விரைவில் எடிட்டிங், டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இந்தப்படம் இருக்கும்" என்று கூறினார் இயக்குநர் அதியன் ஆதிரை.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்