முகப்புகோலிவுட்

‘என் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ' - நடிகர் தினேஷ்

  | May 02, 2019 16:16 IST
Dinesh

துனுக்குகள்

  • இந்த படத்தை இயக்குநர் அதியன் ஆதிரை இயக்குகிறார்
  • இயக்குநர் பா.இரஞ்சித் இப்படத்தை தயாரித்து வருகிறார்
  • தினேஷ் இப்படத்தின் கதாநாயகநாக நடித்திருக்கிறார்
 
"அட்டகத்தி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார்.
 
அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் முக்கியமானவை "குக்கூ", "விசாரணை" ஆகிய படங்கள் மிகமுக்கியமானவை. கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்துவரும் இவர்  அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
குக்கு மற்றும் விசாரணை படங்களைப் போல சவாலான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் "திருடன் போலீஸ்", " அண்ணனுக்கு ஜே" என பக்காவான எண்டெர்டெயினிங் கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.
 
அந்த வரிசையில்  தற்பொழுது  இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன்ஆதிரை இயக்கத்தில்  "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படம் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.
 
"குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. அதேசமயம் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியும் , குடும்பங்கள் ,இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். ஒரு லாரி ஓட்டுனரின் மன நிலையில் லாரி ஓட்டுனராக வடதமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்.
 
அடுத்தடுத்து தமிழகம் மற்றும்  மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிற மாநிலங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு உகந்த கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்" என்கிறார் தினேஷ்
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்