முகப்புகோலிவுட்

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' எப்போது வெளியாகிறது?

  | October 09, 2019 10:28 IST
Gundu

துனுக்குகள்

 • நீலம் தயாரிப்பில் இரண்டாவது படம் இது
 • பா.இரஞ்சித்தின் உதவியாளராக இருந்த அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கி இருக்கிறா
 • நவம்பர் மாதம் இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இயக்குனர் பா. இரஞ்சித்தின்(Ranjith)   நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ' இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து  வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. 

தினேஷ்,(Dinesh) ஆனந்தி (Kayal Ananthi) நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை  இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு ,  கலை இயக்குனராக  த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.

இதை வாசிக்க: ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா சிவா?
நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்க்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது , இரண்டாவது தாயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனரஞ்சகமான கதையமைப்பில் , மக்கள் ரசிக்கும்விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக கூறுகிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com